என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மிச்சாங் புயல் கனமழையில் சாலை ஓரங்களில் குவிந்த குப்பைகள்...
    X

    மிச்சாங் புயல் கனமழையில் சாலை ஓரங்களில் குவிந்த குப்பைகள்...

    • சாக்கடைகளில் இருந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட குப்பை கூழங்கள் சாலை ஓரங்கள், தெருக்களில் குவிந்து கிடக்கின்றன.
    • மழை நீர் தேங்கியிருந்த எல்லா சாலைகளுமே குண்டும் குழியுமாகி, கற்கள் சிதறி கிடப்பதால் வாகனங்கள் செல்ல தடுமாறுகின்றன.

    சென்னை:

    சென்னை முழுவதும் நேற்று பெய்த பெரு மழையில் கால்வாய்கள், சாக்கடைகளில் இருந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட குப்பை கூழங்கள் சாலை ஓரங்கள், தெருக்களில் குவிந்து கிடக்கின்றன.

    எந்த பக்கம் திரும்பினாலும் சிதறி கிடக்கும் குப்பைகள், கழிவுகள், பெயர்ந்து கிடக்கும் சாலைகளால் போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது.

    வெளியூர்களில் இருந்தும் வரவழைக்கப்பட்டுள்ள தூய்மை பணியாளர்கள் தண்ணீர் வடிந்த பகுதிகளில் மட்டும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

    மழை நீர் தேங்கியிருந்த எல்லா சாலைகளுமே குண்டும் குழியுமாகி, கற்கள் சிதறி கிடப்பதால் வாகனங்கள் செல்ல தடுமாறுகின்றன.

    இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் பலர் தடுமாறி கீழே விழுந்தனர்.

    Next Story
    ×