என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாநகராட்சி-நகராட்சியில் 451 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு வேலை: முதலமைச்சர் ஆணை வழங்கினார்
    X

    மாநகராட்சி-நகராட்சியில் 451 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு வேலை: முதலமைச்சர் ஆணை வழங்கினார்

    • தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் 130 நபர்களுக்கும் என மொத்தம் 451 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை.
    • வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    சென்னை:

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் சென்னை மாநகராட்சியில் 227 நபர்களுக்கும் நகராட்சி நிர்வாக இயக்குனரகத்தில் 84 நபர்களுக்கும், பேரூராட்சிகள் இயக்குனரகத்தில் 10 நபர்களுக்கும்,

    தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் 130 நபர்களுக்கும் என மொத்தம் 451 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    Next Story
    ×