search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தென்காசி கோவில் திருப்பணிகள்- டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு முதலமைச்சர் புகழாரம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தென்காசி கோவில் திருப்பணிகள்- டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு முதலமைச்சர் புகழாரம்

    • மாவீரன் பூலித்தேவனின் படைத்தளபதியான ஒண்டிவீரனுக்கு மணிமண்டபம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ததும் முத்தமிழ் அறிஞர் கலைஞர்தான்.
    • மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆட்சிகாலத்தில் தினத்தந்தி அதிபர் பெருமதிப்பிற்குரிய பா.சிவந்தி ஆதித்தன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசியில் இன்று நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    தென்காசிக்கு வந்ததுமே இந்த மண்ணைப்போலவே மனமும் குளிர்ந்து வருகிறது. எப்போதும் லேசான தூரல், சாரலாக பெய்து வருவதை பார்க்கும்போது சென்னையை போன்று வெப்பமான இடத்தில் இருந்து வந்த எனக்கு இதமாக இருக்கிறது.

    ஆண்டுதோறும் குற்றாலத்தில் சாரல் திருவிழா அரசு சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் அமைந்துள்ளது தென்காசி மாவட்டம். குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகியவற்றை உள்ளடக்கியது தென்காசி மாவட்டம்.

    அதிகமான அருவிகளை கொண்ட மாவட்டம். அணைகள் உள்ள மாவட்டம். மொத்தத்தில் எழில் கொஞ்சும் மாவட்டம் தென்காசி மாவட்டம். வீரத்தின் விளைநிலமாக இருக்கக்கூடிய பூலித்தேவன் மண் இந்த மண். இந்திய விடுதலைக்காக குரல் கொடுத்து ஆங்கிலேயேர்களுக்கு வரி கொடுக்க மறுத்த பூலித்தேவன் மண் இந்த மண். நெற்கட்டான்செவலில் மாவீரன் பூலித்தேவனுக்கு மணிமண்டபம், சிலையுடன் அமைத்து கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

    மாவீரன் பூலித்தேவனின் படைத்தளபதியான ஒண்டிவீரனுக்கு மணிமண்டபம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ததும் முத்தமிழ் அறிஞர் கலைஞர்தான்.

    வடக்கே ஒரு காசி உள்ளதை போல தெற்கே ஒரு காசி உருவாக்க வேண்டும் என்பதை மன்னர் பராக்கிரம பாண்டியன் நினைத்து உருவாக்கியது தான் தென்காசி கோபுரம்.

    500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தென்காசி கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட 1960-ம் ஆண்டு நினைத்தபோது திருப்பணிக்குழு தலைவராக நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவராக பி.டி.ராஜன் நியமிக்கப்பட்டார்.

    பின்னர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆட்சிகாலத்தில் தினத்தந்தி அதிபர் பெருமதிப்பிற்குரிய பா.சிவந்தி ஆதித்தன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. 25-06-1990-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த தினகரன் கே.பி. கந்தசாமி தலைமையில் ராஜகோபுரம் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது.

    இப்படி இயற்கைக்கும், ஆன்மீகத்திற்கும், வீரத்திற்கும், விளைச்சலுக்கும் புகழ்பெற்ற தென்காசி மாவட்டத்திற்கு வந்ததற்கு பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். பூரிப்பு அடைகிறேன். இது அரசு விழாவா? அல்லது கட்சியின் மாநில மாநாடா? என்ற அளவிற்கு மிக பிரமாண்டமாக இந்த விழா நடத்தப்படுகிறது.

    இந்த விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் தொகையும் மிக அதிக அளவில் ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×