search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பேருந்துகள் திடீர் ஸ்டிரைக்.. ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூல்.. பயணிகள் ஆவேசம்
    X

    பேருந்துகள் திடீர் ஸ்டிரைக்.. ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூல்.. பயணிகள் ஆவேசம்

    • மாலை நேரம் என்பதால் வேலை முடிந்து வீடு திரும்புவோர் அவதிப்பட்டனர்.
    • கையில் பணம் வைத்திருந்தவர்கள் ஆட்டோ மற்றும் டாக்சிகளில் செல்லத் தொடங்கினர்.

    சென்னை:

    சென்னையில் இன்று அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்துத் துறையில் ஒப்பந்த முறையில் ஓட்டுநர்களை நியமனம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து வழித்தடங்களிலும் இயங்கிக்கொண்டிருந்த பேருந்துகளை அப்படியே நிறுத்தினர். பல பேருந்துகளை பணிமனைகளுக்கு கொண்டு சென்றனர். இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

    மாலை நேரம் என்பதால் வேலை முடிந்து வீடு திரும்புவோர், குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். நேரம் என்பதால் நேரம் செல்லச் செல்ல பேருந்து நிலையங்கள் மற்றும் பேருநது நிறுத்தங்களில் கூட்டம் அதிகரித்தது. பேருந்துகள் எப்போது இயங்கும் என்று உறுதியாக தெரியாத நிலையில், கையில் பணம் வைத்திருந்தவர்கள் ஆட்டோ மற்றும் டாக்சிகளில் செல்லத் தொடங்கினர்.

    பேருந்துகள் இயங்காத சூழ்நிலையை பயன்படுத்தி ஆட்டோ மற்றும் டாக்சிகளில் வழக்கமான கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் பயணிகள் மேலும் இன்னலுக்கு ஆளாகினர். ஒருபுறம் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி தங்களை தவிக்கவிட்ட நிலையில், இதுதான் கிடைத்த வாய்ப்பு என ஆட்டோ டிரைவர்களும், டாக்சி டிரைவர்களும் இப்படி கட்டணத்தை உயர்த்துகிறார்களே என ஆவேசம் அடைந்தனர்.

    இதையடுத்து ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் விதிகளுக்குட்பட்டு கட்டணம் வசூலித்து பொதுமக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என சென்னை காவல்துறை அறிவுறுத்தியது.

    சுமார் 2 மணி நேரம் நீடித்த போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் படிப்படியாக பேருந்துகள் இயங்கத் தொடங்கின.

    Next Story
    ×