என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நன்மங்கலம் ஏரி - செம்பாக்கம் ஏரி
புறநகர் பகுதிகளில் ஏரிகள் நிரம்பின
- பீர்க்கன்காரணை ஏரி ஆக்கிரமிப்புகளும் இதுவரை அகற்றப்படவில்லை.
- செம்பாக்கம் ஏரியின் பெரும்பகுதி ஆக்கிரமிப்புகளாலும், ஆகாயத்தாமரை செடிகளாலும் சூழப்பட்டு உள்ளதால் மழைநீரை தேக்கிவைக்க முடியாமல் வீணாக வெளியேற்றப்பட்டு வருவது வேதனை அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தாம்பரம்:
சென்னை புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், சேலையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உள்ளது. நன்மங்கலம் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள அருள்முருகன் நகர், நந்தவனம் பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. செம்பாக்கம் ஏரியும் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. செம்பாக்கம் ஏரியின் பெரும்பகுதி ஆக்கிரமிப்புகளாலும், ஆகாயத்தாமரை செடிகளாலும் சூழப்பட்டு உள்ளதால் மழைநீரை தேக்கிவைக்க முடியாமல் வீணாக வெளியேற்றப்பட்டு வருவது வேதனை அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
பீர்க்கன்காரணை ஏரி ஆக்கிரமிப்புகளும் இதுவரை அகற்றப்படவில்லை. குரோம்பேட்டை வீரராகவன் ஏரி, பெருங்களத்தூர் குண்டுமேடு ஏரி ஆகியவையும் ஆகாயத்தாமரை செடிகளால் சூழப்பட்டுள்ளது. இதன் காரணமாக கனமழை பெய்தும் அந்த ஏரிகளில் மழைநீரை தேக்கி வைக்க முடியாமல் அந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.






