search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக 2 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல்
    X

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக 2 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல்

    • செந்தில்பாலாஜி வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு செப்டம்பர் 30-ந் தேதிக்குள் விசாரணையை முடிக்க உத்தரவிட்டிருந்தது.
    • 120 பேருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி உள்ளது.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜி அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது டிரைவர்-கண்டக்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது தொடர்பாக 3 வழக்குகள் போடப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ஒரு வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் மீதமுள்ள 2 வழக்குகளில் போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

    செந்தில்பாலாஜி வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு செப்டம்பர் 30-ந் தேதிக்குள் விசாரணையை முடிக்க உத்தரவிட்டிருந்த நிலையில்தான் மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறார்கள்.

    போக்குவரத்து கழக முறைகேடு தொடர்பாக செந்தில்பாலாஜி மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த போக்குவரத்து கழக முன்னாள் நிர்வாக இயக்குனர்கள், என்ஜினீயர்கள் உள்பட 45 பேர் மீது குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக 120 பேருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×