என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் இன்று அரசு பேருந்துகள் திடீர் ஸ்டிரைக்- நடுவழியில் தவிக்கும் பயணிகள்
- வழித்தடத்தில் சென்றுகொண்டிருந்த பேருந்துகளை பணிமனைகளுக்கு கொண்டு சென்றனர்.
- ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்திவிட்டு டிரைவர், கண்டக்டர்கள் இறங்கி சென்றுவிட்டனர்.
சென்னை:
சென்னையில் இன்று மாலையில் திடீரென அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். பல்லவன் இல்லம், சைதாப்பேட்டை, ஆலந்தூர் உள்ளிட்ட பணிமனைகளில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வழித்தடத்தில் சென்றுகொண்டிருந்த பேருந்துகளை பணிமனைகளுக்கு கொண்டு செல்லத் தொடங்கினர்.
பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்திவிட்டு டிரைவர், கண்டக்டர்கள் இறங்கிவிட்டனர். பயணிகளிடம் பஸ் போகாது என்று கூறிவிட்டனர். பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் டிரைவர், கண்டக்டர்கள் பேருந்துகளை நிறுத்தியதால், ஏராளமான பயணிகள் நடுவழியில் தவிக்கின்றனர். பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
அரசுப் போக்குவரத்து துறையை தனியார்மயமாக்குதலை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த போராட்டம் நடைபெறுகிறது. தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.






