என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மூன்று பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்ந்தெடுக்க தேடுதல் குழு நியமனம்
    X

    மூன்று பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்ந்தெடுக்க தேடுதல் குழு நியமனம்

    • முதல்முறையாக பல்கலைக்கழக மானிய குழு சார்பில், தேடுதல் குழுவில் உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • 3 உறுப்பினர்கள் கொண்ட தேர்வு குழு அமைக்கப்படும் நிலையில் தற்போது 4 உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைப்பு.

    சென்னை பல்கலைக்கழகம் உள்பட மூன்று பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தர் பதவிக்கு தேடுதல் குழு அமைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.

    முதல்முறையாக பல்கலைக்கழக மானிய குழு சார்பில், தேடுதல் குழுவில் உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கர்நாடகா மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பட்டு சத்தியநாராயணா தலைமையில் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் சுஷ்மா யாதவா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்வு செய்ய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    வழக்கமாக 3 உறுப்பினர்கள் கொண்ட தேர்வு குழு அமைக்கப்படும் நிலையில் தற்போது 4 உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

    கூடுதலாக பல்கலைக்கழக மானிய குழு சார்பில் உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×