என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அண்ணாமலை 3-ம் கட்ட யாத்திரை 4-ந்தேதி தொடக்கம்
    X

    அண்ணாமலை 3-ம் கட்ட யாத்திரை 4-ந்தேதி தொடக்கம்

    • அண்ணாமலை 2-ம் கட்ட யாத்திரையை கடந்த 4-ந்தேதி தென்காசி மாவட்டத்தில் தொடங்கினார்.
    • 3-ம் கட்ட யாத்திரையில் மொத்தம் 23 நாட்கள் பயணம் செய்கிறார்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் தமிழ் நாடு முழுவதும் யாத்திரை செல்கிறார்.

    ராமேசுவரத்தில் மத்திய மந்திரி அமித்ஷா ஜூலை 22-ந்தேதி தொடங்கி வைத்தார். 41 சட்டமன்ற தொகுதிகள் வழியாக சென்று திருநெல்வேலியில் முதல்கட்ட யாத்திரையை நிறைவு செய்தார்.

    பின்னர் 2-ம் கட்ட யாத்திரையை கடந்த 4-ந்தேதி தென்காசி மாவட்டத்தில் தொடங்கினார். கடந்த 27-ந்தேதி கோவையில் நிறைவு செய்தார்.

    3-ம் கட்ட யாத்திரையை வருகிற 4-ந்தேதி (புதன்) மேட்டுப்பாளையத்தில் தொடங்குகிறார். அங்கிருந்து திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை வழியாக சென்று தஞ்சாவூரில் நிறைவு செய்கிறார்.

    இடையில் நவராத்திரியையொட்டி 22-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ஓய்வு. 3-ம் கட்ட யாத்திரையில் மொத்தம் 23 நாட்கள் பயணம் செய்கிறார்.

    இதற்கிடையில் நாளை (1-ந்தேதி) டெல்லி செல்வார் என்று கூறப்படுகிறது. 2-ந்தேதி காந்தி மற்றும் காமராஜர் நினைவிடங்களில் மரியாதை செலுத்துகிறார். 3-ந்தேதி சென்னையில் நடைபெறும் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    Next Story
    ×