search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளை முட்டி போலீஸ்காரர் படுகாயம்
    X

    பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் மீது பாய்ந்த காளை முட்டியதையும், தடுமாறி கீழே விழுந்த அவர் காளையின் பிடியில் இருந்து தப்ப முயற்சித்ததையும் காணலாம்.

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளை முட்டி போலீஸ்காரர் படுகாயம்

    • ஜல்லிக்கட்டு போட்டியை ஒழுங்குபடுத்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மைதானத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
    • மாடு முட்டிய அதிர்ச்சியில் போலீஸ்காரரும் திடீரென மைதானத்துக்குள் மயங்கி விட அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை:

    உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் திமிலை உயர்த்தி சீறிவரும் காளைகளை மல்லுக்கட்டி மடக்கும் காளையர்கள் கூட்டமும் ஆர்ப்பரித்து வருகிறது.

    போட்டியில் ஜெயிக்கும் காளையர்களுக்கும், காளைகளுக்கும் தங்க காசுகள், மோட்டார் சைக்கிள், மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த போட்டியை ஒழுங்குபடுத்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மைதானத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு காளைகளை வரிசைப்படுத்துவதிலும், அவிழ்த்து விடப்பட்ட காளைகளை பாதுகாப்பாக அனுப்பி வைக்கவும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஜல்லிக்கட்டு மைதானத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு போலீஸ்காரர் மீது திடீரென ஜல்லிக்கட்டு காளை சீறிப்பாய்ந்தது. இதில் நிலை குலைந்துபோன போலீஸ்காரர் மைதானத்துக்குள் கீழே விழ... காளையும் அவரை நோக்கி முன்னேறி முட்டியது. இதில் அவரது கை உள்ளிட்ட பகுதிகளில் லேசான காயம் ஏற்பட்டது. மாடு முட்டிய அதிர்ச்சியில் போலீஸ்காரரும் திடீரென மைதானத்துக்குள் மயங்கி விட அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவ குழுவினரிடம் அழைத்துச் சென்றனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார். ஜல்லிக்கட்டு மைதானத்துக்குள் காளை முட்டியதில் போலீஸ்காரர் படுகாயம் அடைந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதியம் வரை 2 போலீஸ்காரர்கள் உள்பட 21 பேர் காயம் அடைந்தனர்.

    Next Story
    ×