என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9 தாசில்தார்கள் இடமாற்றம்- கலெக்டர் நடவடிக்கை
    X

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9 தாசில்தார்கள் இடமாற்றம்- கலெக்டர் நடவடிக்கை

    • பொதுமக்களிடம் பட்டா மாற்றம் செய்ய ரூ.5000 முதல் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது.
    • தாசில்தார் மோகனை ஓரகடம் சிப்காட் தனி வட்டாட்சியர் பணிக்கு மாற்றம் செய்து கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் பட்டா பெறுதல், பட்டா பெயர் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு நகர நிலவரித்திட்ட தாசில்தாரிடம் பொதுமக்கள் விண்ணப்பித்து வருகிறார்கள்.

    அவ்வாறு விண்ணப்பிக்கும் பொதுமக்களிடம் பட்டா மாற்றம் செய்ய ரூ.5000 முதல் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது. சொத்தின் மதிப்புக்கு ஏற்றவாறு லஞ்சம் அதிக அளவில் கேட்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அந்த அலுவலகத்துக்கு சென்ற தினேஷ், டில்லிபாபு ஆகிய இருவரிடம் அலுவலகத்தில் பணியாற்றும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர் லஞ்சம் கேட்கும் `ஆடியோ, வீடியோ' வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து தாசில்தார் மோகன் மற்றும் அலுவலக ஊழியர்களிடம், கோட்டாட்சியர் கனிமொழி விசாரணை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக தாசில்தார் மோகனை ஓரகடம் சிப்காட் தனி வட்டாட்சியர் பணிக்கு மாற்றம் செய்து கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

    அவரது பணியிடத்தில் இந்துமதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 9 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×