என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஆவடியில் 70 மி.மீ மழை கொட்டியது
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு பலத்த மழை கொட்டுகிறது.
- திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை கொட்டியது.
செங்குன்றம்:
வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு பலத்த மழை கொட்டுகிறது. இதேபோல் நேற்று மதியம் கனமழை கொட்டி தீர்த்தது. மாலை வரை பல இடங்களில் விட்டு விட்டு மழை நீடித்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை கொட்டியது. புழல், ஆவடி, சோழவரம், பொன்னேரி, திருவாலங்காடு, திருத்தணி, தாமரைப்பாக்கம், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை பகுதியில் மழை வெளுத்து வாங்கியது.
கனமழை காரணமாக தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 70 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு: -
கும்மிடிப்பூண்டி - 6
பள்ளிப்பட்டு - 10
ஆர்.கே.பேட்டை - 12
சோழவரம் - 35
பொன்னேரி - 10
புழல் - 47
ஜமீன் கொரட்டூர் - 17
பூந்தமல்லி - 17
திருவாலங்காடு - 30
திருத்தணி - 16
பூண்டி - 12
தாமரைப்பாக்கம் - 39
திருவள்ளூர் - 24
ஊத்துக்கோட்டை - 16
ஆவடி - 70