search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் 4 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம்
    X

    தமிழகத்தில் 4 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம்

    • அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது ஓரிரு இடங்களில் புழுக்கம் ஏற்படலாம்.
    • சேலம், ஈரோடு, தர்மபுரி, மதுரை ஆகிய இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ளதால் அடுத்த 4 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்க உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 4 நாட்கள் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். மேலும் இயல்பை விட 3 டிகிரி முதல் 5 டிகிரி வரை வெயிலின் அளவு அதிக ரிக்கும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது ஓரிரு இடங்களில் புழுக்கம் ஏற்படலாம்.

    இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரிக்கு மேல் இருக்கும். சேலம், ஈரோடு, தர்மபுரி, மதுரை ஆகிய இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வெயிலில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வெப்பத்தை தணிக்கும் பழங்களின் விற்பனை சூடு பிடித்துள்ளது. உடலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி, கிர்னி பழம், வெள்ளரி, நுங்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தர்பூசணி வந்து குவிந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் தர்பூசணி ஒரு கிலோ ரூ. 10 முதல் ரூ.12 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனையில் கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    கிர்ணி பழம் கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரையும், சில்ல ரையில் கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளரி பிஞ்சு ரூ.20 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படு கிறது. 2 நுங்கு ரூ.10-க்கு விற்கப்படுகிறது. மேலும் கடைகளில் பழச்சாறுகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

    Next Story
    ×