என் மலர்

  தமிழ்நாடு

  நாய்க்கு வளைகாப்பு செய்த குடும்பத்தினர்
  X
  நாய்க்கு வளைகாப்பு செய்த குடும்பத்தினர்

  கடலூர் அருகே தன் வீட்டில் வளர்த்த நாய்க்கு வளைகாப்பு செய்த குடும்பத்தினர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடலூர் அருகே வீட்டில் வளர்த்த நாய்க்கு வளைகாப்பு நடத்திய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
  கடலூர்:

  கடலூர் அருகே காரைக்காடு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜீவா சங்கர். இவர் கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

  இவர் தனது வீட்டில் செல்லமாக ஜாக்கி என்ற ஜெர்மன் ஷெப்பர்ட் வகையை சேர்ந்த நாயை கடந்த 2 வருடங்களாக வளர்த்து வருகிறார். 2 வயதான ஜாக்கிக்கு தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில் வளைகாப்பு செய்ய விரும்பிய ஷங்கர் ஜீவா குடும்பத்தினர் தங்களது நெருங்கிய உறவினர்களை வரவழைத்து தனது செல்லப் பிராணிக்கு சீர்வரிசைகள் வைத்தும் கழுத்தில் தங்கச் சங்கிலி அணிவித்து மாலை அணிவித்தனர். 

  பின்னர் பழவகைகள் பலகாரங்களை வைத்து ஒவ்வொரு பெண்களும் குங்குமம் இட்டு நலங்கு வைத்து ஆசீர்வாதம் செய்தனர்.

  இந்த காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. 
  Next Story
  ×