search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணை நீர்மட்டம் 118 அடியாக உயர்வு

    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஒகேனக்கல்லில் நேற்று மாலை 9 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்தது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக அருவியில் குளித்தும், குடும்பத்துடன் படகு சவாரியும் சென்று வருகிறார்கள்.

    ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் மேட்டூர் அணைக்கு நேராக வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 8 ஆயிரத்து 539 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 8 ஆயிரத்து 454 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது .

    அணையில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இன்னும் 2 நாட்களில் கல்லணைக்கு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    நேற்று 117.92 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 118.09 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மீண்டும் அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

    Next Story
    ×