search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிறை
    X
    சிறை

    இலங்கை சிறையில் இருந்து மண்டபம் மீனவர்கள் 4 பேர் இன்று விடுதலை

    விசைப்படகு தொடர்பான வழக்கு விசாரணைக்காக வருகிற ஜூலை மாதம் 15-ந் தேதி விசைப்படகின் உரிமையாளர் ஆஜராக வேண்டுமென இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
    ராமேசுவரம்:

    கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் விசைப்படகில் மீன் பிடிக்க சென்றனர்.

    கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த அவர்களை, எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். மீனவர்கள் 4 பேரும் அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    வழக்கு தொடர்பாக இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் 3 முறை ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட மண்டபம் மீனவர்கள் 4 பேரும், 4-வது முறையாக இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் 4 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    விசைப்படகு தொடர்பான வழக்கு விசாரணைக்காக வருகிற ஜூலை மாதம் 15-ந் தேதி விசைப்படகின் உரிமையாளர் ஆஜராக வேண்டுமென கோர்ட்டு உத்தரவிட்டது.


    Next Story
    ×