என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ரோட்டை கடந்து சென்ற யானை கூட்டம்.
    X
    ரோட்டை கடந்து சென்ற யானை கூட்டம்.

    குன்னூர்- மஞ்சூர் நெடுஞ்சாலையில் சாலையை கடந்து சென்ற யானை கூட்டம்

    குன்னூர் - மஞ்சூர் நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் கூட்டமாக சாலையை கடந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை, காட்டெருமை, சிறுத்தை ஆகியவை அதிகளவில் உள்ளன. சில நேரங்களில் அவை ஊருக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் குன்னூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக காட்டு யானைகள் உலா வருகின்றன. இந்த யானைகள் ரன்னிமேடு, கிளன்டல், பில்லிமலை, சின்ன கரும்பாலம் பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீரை தேடி வருகிறது.

    தேயிலை தோட்டங்களிலும் காட்டு யானைகள் முகாமிட்டு வருகிறது. நேற்று கரிமரா எஸ்டேட் பகுதியில் யானைகள் கூட்டம் நுழைந்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனே அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை விரட்டினர். இதனால் யானைகள் தேயிலைத் தோட்டம் வழியாக வந்து காட்டேரி சாலையை கடந்தது. பின்னர் அங்கிருந்து சிறிய வனப்பகுதியில் சென்றது.

    குன்னூர் - மஞ்சூர் நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் கூட்டமாக சாலையை கடந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். மேலும் அங்கு தேயிலை தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் காட்டு யானைகளை பார்த்ததும் பயந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். குன்னூர் பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை வனத்துறையினர் தொடர்ந்து விரட்ட தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.



    Next Story
    ×