என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குன்னூர் அருகே குட்டிகளுடன் உலா வரும் யானை
குட்டிகளுடன் சுற்றிதிரியும் 12 காட்டு யானைகள்- வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
குன்னூர் அருகே குடியிருப்பையொட்டிய தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் கூட்டத்தை பொதுமக்கள் வேடிக்கை பார்த்து செல்கிறார்கள்.
ஊட்டி:
வனப்பகுதிகளில் நிலவும் வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு விலங்குகள் வனத்தையொட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருகிறது.
கடந்த சில வாரங்களாக நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள தேயிலை தோட்டங்களில் குட்டியுடன் காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகிறது. இதனால் பொதுமக்களும், தேயிலை தோட்ட தொழிலாளர்களும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் பணிக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள சின்னகரும்பாலாம் குடியிருப்பு ஒரு குட்டியுடன் 3 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. மற்ற 2 குட்டிகளுடன் 9 யானைகள் தேயிலை தோட்டம் வழியாக உலிக்கல் பண்ணமடைக்கு சென்றுள்ளது. அந்த யானைகளை அங்கிருந்து கீழே கொண்டு வர வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
குன்னூர் வனத்துறை வனசரகர் சசிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் பட்டாசு வெடிக்காமலும், தகரங்களை வைத்து தட்டாமல், கூச்சலிடாமல் மக்களுக்கு இடையூறு செய்யாதவாறு இரவு, பகலாக யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராதவாறு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம். யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்டுவதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறோம். மக்களுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்காமல் யானையை விரட்டும் பணி நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு இந்த பணியானது தொடரும் என்றனர்.
இதற்கிடையே குடியிருப்பையொட்டிய தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் கூட்டத்தை பொதுமக்கள் வேடிக்கை பார்த்து செல்கிறார்கள்.

Next Story