என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விலை வீழ்ச்சியால் செடியிலேயே பழுத்து வீணாகும் தக்காளி
    X
    விலை வீழ்ச்சியால் செடியிலேயே பழுத்து வீணாகும் தக்காளி

    விலை வீழ்ச்சியால் செடியிலேயே வீணாகி வரும் தக்காளி- விவசாயிகள் கவலை

    தாளவாடி மலைப்பகுதியில் பழுத்த தக்காளியை பறித்து குப்பையில் கொட்டி வருவதாகவும், சிலர் அப்படியே செடியில் விட்டு விடுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
    தாளவாடி:

    ஈரோடு மாவட்டத்தின் கடைகோடியில் கடல் மட்டத்தில் இருந்து 1,105 மீட்டர் உயரத்தில் உள்ளது தாளவாடி.

    அதன் சுற்றுவட்டார கிராமங்களான கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்டகாஜனூர் பாரதிபுரம், கெட்டவாடி, தலமலை அருள்வாடி போன்ற 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கத்திரி, வெண்டை, தக்காளி, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், சின்னவெங்காயம், பீன்ஸ் ஆகிய பயிர்களை பயிரிடுவது வழக்கம்.

    இப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இவற்றை வாங்க வரும் வியாபாரிகள் ஒரு கிலோ 2 ரூபாய் முதல் 3 ரூபாய் விலை கொடுப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தாளவாடி விவசாயிகள் கூறியதாவது:-

    3 மாத பயிரான தக்காளி நாற்று, களைஎடுத்தல், உரம் மருந்து என ஏக்கர் ஒன்றுக்கு ரூ.80 ஆயிரம் வரை செலவு ஆகிறது. கடந்த 3 மாதம் முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.25 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். ஆனால் தற்போது ஒரு கிலோ 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் செய்கின்றனர்.

    விளைச்சல் அதிகம் எனக் காரணம் கூறி குறைவான விலைக்கு கேட்கின்றனர். வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் பயிர்களுக்கு செலவு செய்த அசல் தொகை கூட கிடைப்பதில்லை.

    இதனால் பழுத்த தக்காளியை பறித்து குப்பையில் கொட்டி வருவதாகவும், சிலர் அப்படியே செடியில் விட்டு விடுவதாகவும் தெரிவித்தனர். விவசாயத்தை நம்பி இருந்தால் கடன் தொல்லையால் தான் அவதிபட முடியும். விவசாயத்தை விட்டு நகர் பகுதிக்கு தான் இனி செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.



    Next Story
    ×