search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராஜினாமா செய்த லிங்கம்மாள்.
    X
    ராஜினாமா செய்த லிங்கம்மாள்.

    அ.தி.மு.க. ஒன்றியக்குழு தலைவர் திடீர் ராஜினாமா

    ஆத்தூர் ஒன்றியக்குழு தலைவர் லிங்கம்மாள் தனது பதவியை ராஜினாமா செய்வதாக மாவட்ட கலெக்டரிடம் கடிதம் கொடுத்தார்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியக்குழு தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த லிங்கம்மாள் உள்ளார். இவர் இன்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். 

    அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கலெக்டரிடம் கடிதம் கொடுத்தார். இது சேலம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    லிங்கம்மாள் மீது ஏற்கனவே ஒன்றிய குழு உறுப்பினர்கள் 11 பேர், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, ஆத்தூர் ஆர்.டி.ஓ.விடம் கடந்த மாதம் மனு அளித்திருந்தனர். இதையடுத்து ஆர்.டி.ஓ. சரண்யா, ஒன்றியக்குழு தலைவர் லிங்கம்மா மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் கூட்டம், கடந்த பிப்ரவரி 8ம் தேதி நடைபெறும் என அறிவித்திருந்தார்.

    பின்பு இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு 13 உறுப்பினர்கள் கொண்டது. இதில் அ.தி.மு.க. 5, தே.மு.தி.க. 2, பாட்டாளி மக்கள் கட்சி 1, தி.மு.க. 6, என கவுன்சிலர்கள் உள்ளனர்.

    தற்போது தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேர், அ.தி.மு.க.வில் இருந்த 2 கவுன்சிலர்கள், தே.மு.தி.க. வைசேர்ந்த  2 பேர், பா.ம.க.வை சேர்ந்த ஒருவர் என 11 கவுன்சிலர்கள் ஒரே அணியில் உள்ளதால் இதில் தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் தலைவர் ஆகும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
    Next Story
    ×