என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தந்தத்தால் செய்த செவ்வக பகடைக்காய்
    X
    தந்தத்தால் செய்த செவ்வக பகடைக்காய்

    கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு: தந்தத்தால் செய்த செவ்வக பகடைக்காய் கிடைத்தது

    கீழடியில் தற்போது நடந்த அகழாய்வு பணியில் முதன்முறையாக செவ்வக வடிவிலான தந்தத்தாலான பகடைக்காய் கிடைத்துள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணிகளை கடந்த 11-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நேற்று கீழடியில் பணிகள் நடைபெற்றபோது, 4 பாசி மணிகள் கண்டெடுக்கப்பட்டன. இதில் 2 பச்சை நிறமும், 2 ஊதா நிறத்திலும் உள்ளன.

    தொடர்ந்து குழி தோண்டியபோது நேற்று மாலையில் செவ்வக வடிவில் ஒரு பொருள் கிடைத்தது. அதனை ஆய்வு செய்தபோது, அது யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடைக்காய் என தெரிய வந்துள்ளது. இதுவரை தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் கன சதுர வடிவத்தில்தான் பகடைக்காய் கிடைத்து வந்தன. தற்போது நடந்த அகழாய்வு பணியில் கீழடியில், முதன்முறையாக செவ்வக வடிவிலான தந்தத்தாலான பகடைக்காய் கிடைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×