என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வருமான வரி சோதனை
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நண்பர் கடையில் வருமான வரி சோதனை
விருத்தாசலம் கடைவீதியில் உள்ள பிரபலமான நகைக்கடையில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேரு வீதியில் பிரபல ஜவுளிக்கடை உள்ளது. இந்த கடை எப்போதுமே வாடிக்கையாளர்கள் கூட்டத்தில் நிரம்பி வழியும்.
இன்று காலை வழக்கம்போல் ஜவுளிக்கடை ஊழியர்கள் கடையைத் திறக்க வந்தனர். சுமார் 10.30 மணிக்கு அவர்கள் கடையைத் திறந்தபோது 15 அதிகாரிகள் கொண்ட வருமான வரித்துறையினர் அங்கு வந்தனர்.
தங்களது அடையாள அட்டைகளை காட்டி கடையை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர். வாடிக்கையாளர்கள் யாரையும் கடைக்குள் அனுமதிக்கவில்லை. இதேபோல் கடைக்குள் இருந்த ஊழியர்களையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.
இதுகுறித்து ஜவுளிக்கடையின் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கடைக்கு விரைந்து வந்தார். அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.
இந்த ஜவுளிக்கடை உரிமையாளர் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் நெருங்கிய நண்பர் ஆவார். மேலும் புதுவையில் உள்ள ஜவுளிக்கடை உரிமையாளரின் தம்பி வீடு உள்ளிட்ட 2 பேர் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 10.30 மணி முதல் தொடர்ந்து நடந்து வரும் இந்த சோதனை முடிந்த பிறகே முழு விபரம் தெரியவரும்.
இதேபோல் விருத்தாசலம் கடைவீதியில் உள்ள பிரபலமான நகைக்கடையிலும் இன்று காலை 11 மணி முதல் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடலூர், திண்டிவனம், விருத்தாசலம் என்று ஒரே நாளில் இன்று நடைபெறும் அதிரடி வருமான வரி சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story