என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

உறைபனியால் ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள பச்சை புல்வெளிகள் வெள்ளை நிறத்தில் காட்சியளித்தது.
ஊட்டியில் இன்று 2 டிகிரி செல்சியஸ் பதிவு- உறைபனியால் வெள்ளை நிறமாக மாறிய பச்சை புல்வெளிகள்
உறைபனி தாக்கம் அதிகரித்ததால் ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள பூந்தொட்டிகளில் நிரப்பப்பட்ட மண் மீது உறைபனி கொட்டி கிடந்தது. ஊட்டியில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி இருந்தது.
ஊட்டி:
மலைப்பிரதேசமான ஊட்டியில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குளிர்காலம் நிலவுவதோடு, உறைபனி தாக்கம் காணப்படும்.
கடந்த சில நாட்களாக ஊட்டியில் உறைபனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், காந்தல் முக்கோணம் விளையாட்டு மைதானம் மற்றும் குடியிருப்பு பகுதிகளை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் உறைபனி கொட்டி கிடந்தது.
பச்சை புல்வெளிகள் தெரியாத அளவுக்கு அந்த இடமே வெண்மை நிறத்தில் காட்சி அளித்தது. காந்தல் முக்கோணம் பகுதியில் புல்வெளிகளில் உறைபனி படர்ந்திருந்தது. மேலும் உறைபனி தாக்கத்தால் தண்ணீரும் ஆவியாக மாறியது.

அதிகாலையில் விவசாய பணிகளுக்கு செல்கிறவர்கள் குளிரை போக்க நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தும், கம்பளி ஆடைகளை அணிந்தும் சென்றனர்.
தொடர் பனியால் தாழ்வான பகுதிகளில் உள்ள புல்வெளிகள், வனப்பகுதிகளில் உள்ள புல்வெளிகள் கருகி உள்ளன. இதனால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது. திறந்தவெளியில் நிறுத்தப்பட்டு உள்ள இருசக்கர வாகனங்கள், கார்கள் மீது உறைபனி படர்ந்து உள்ளது. அதனை அகற்றினாலும் வாகனங்களை இயக்க சிரமம் ஏற்படுகிறது. என்ஜின் சூடாக நீண்ட நேரம் ஆகிறது.
தொடர்ந்து கொட்டி வரும் உறைபனியின் காரணமாக ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் உறைபனி காணப்பட்டது.

Next Story