என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

X
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
கொரோனா பாதித்தவரை மருத்துவ பரிசோதனையின்றி வீட்டில் தனிமைப்படுத்த கூடாது - தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
By
மாலை மலர்14 Jan 2022 6:00 PM GMT (Updated: 14 Jan 2022 9:06 PM GMT)

அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
சென்னை:
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநில மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
உரிய மருத்துவ பரிசோதனை இல்லாமல் கொரோனா பாதித்தவரை வீட்டு தனிமைக்கு அனுமதிக்கக் கூடாது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
அடுத்த அலையில் இறப்பை பெருமளவில் குறைக்க வேண்டும். யாரை பரிசோதிக்க வேண்டும், யாரை பரிசோதிக்க வேண்டாம் என ஐ.சி.எம்.ஆர். கொடுத்துள்ள வழிகாட்டுதல்களை முறையாகக் கடைபிடிக்க வேண்டும். நோய் அறிகுறி இல்லாதவர்களை பரிசோதிக்க வேண்டாம். தொற்று உறுதியாகும் நபர்கள் தொடர்புடைய இடங்களில் கூடுதல் கவனம் தேவை.
அனைத்து மருத்துவமனைகளும் தற்போதுள்ள கைவசம் உள்ள ஆக்சிஜன் சிகிச்சை மற்றும் சேவைகளை உடனே மதிப்பிட வேண்டும். உள்கட்டமைப்பை ஆராய்ந்து, திரவ மருத்துவ ஆக்சிஜன் நிரப்பும் வசதி, வினியோகம் தங்கு தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் 48 மணி நேரத்துக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். ஆக்சிஜன் சிலிண்டர், அதனை மீண்டும் நிரப்புவதற்கான அமைப்பு குறித்து ஆராய வேண்டும். வென்டிலேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×