என் மலர்
தமிழ்நாடு

.
தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
காவேரிபட்டினத்தில் தி,.மு.க. பிரமுகர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
காவேரிப்பட்டினம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரி பட்டினத்தைச் சேர்ந்தவர் கணேசன். தி.மு.க. பிரமுகர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க. மாணவர் அணியைச் சேர்ந்த மோகனசுந்தரம் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் கணேசன் தனது காரில் கோட்டைமேடு என்ற இடத்தில் வந்து கொண்டி ருந்தார் .அப்போது அங்கு நின்ற சிலர் காரை வழிமறித்து கணேசனை தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் நள்ளிரவில் அங்கு வந்த ஒரு மர்ம கும்பல் திடீரென கணேசன் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிகிறது. இதில் அங்கு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் சேத மானது.
இதுகுறித்து காவேரிபட்டணம் போலீசார் விசாரித்து வருகிறார்கள் .இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
Next Story