என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

X
மேட்டூர் அணை
மேட்டூர் அணை நீர் மட்டம் குறையத் தொடங்கியது
By
மாலை மலர்11 Jan 2022 3:53 AM GMT (Updated: 11 Jan 2022 3:53 AM GMT)

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கி உள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் மேட்டூர் அணை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ந்தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. தொடர்ந்து 42 நாட்கள் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடித்த நிலையில் டிசம்பர் மாதம் 25-ந் தேதி அணையின் நீர்மட்டம் 119.64 அடியானது.
கடந்த மாதம் 25-ந் தேதி முதல் தண்ணீர் திறப்பு 15 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் 31-ந் தேதி முதல் தண்ணீர் திறப்பு 1000 கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் 116 அடிக்கும் குறையாமல் இருந்து வந்தது.
இந்தநிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் டெல்டா பகுதிக்கு தண்ணீர் தேவை அதிகரித்தது. இதையடுத்து நேற்று மாலை முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. கால்வாயில் வழக்கம் போல 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கி உள்ளது. நேற்று 116.59 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 116.21 அடியாக சரிந்தது. பிற்பகலில் நீர்மட்டம் மேலும் குறைந்தது. இதே நிலை நீடித்தால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைய வாய்ப்பு உள்ளது.

Next Story
×