search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 390 கன அடி

    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று காலை 2 ஆயிரத்து 565 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 2 ஆயிரத்து 390 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்காக 1000 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு உள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 116.56 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 116.59 அடியானது. மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த சில நாட்களாக 116 அடியாக நீடிப்பதால் கடல் போல காட்சி அளிக்கிறது.
    Next Story
    ×