என் மலர்

  தமிழ்நாடு

  விஷம்
  X
  விஷம்

  மகள்களுக்கு பணம் தர மறுத்ததால் விரக்தி- மனைவியுடன் விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேடசந்தூரில் மகள்களுக்கு மகன்கள் பணம் தர மறுத்ததால் மனமுடைந்த விவசாயி தனது மனைவியுடன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  வேடசந்தூர்:

  திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மூக்கையகவுண்டனூரைச் சேர்ந்தவர் கொப்பணக்கவுண்டர் (வயது 75). இவரது மனைவி வெள்ளையம்மாள் (70). கொப்பணகவுண்டர் தோட்டத்து களத்து வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு அழகர்சாமி, முத்துச்சாமி என்ற மகன்களும், முத்தம்மாள், மணி ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

  அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். கொப்பணகவுண்டர் தனது பெயரில் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் தனது மகன்கள் 2 பேருக்கும் எழுதி கொடுத்து விட்டார். இதனால் அவரது மகள்கள் தங்களுக்கும் ஏதாவது பண உதவி செய்யுமாறு கேட்டு வந்துள்ளனர்.

  இதனையடுத்து கொப்பணகவுண்டர் தனது 2 மகன்களையும் வரவழைத்து சகோதரிகள் 2 பேருக்கும் தலா ரூ.1 லட்சம் கொடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த பணத்தை அவர்கள் தர மறுத்து விட்டனர். இதனால் கடந்த சில நாட்களாக கொப்பணகவுண்டர் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.

  இன்று காலை அவர்களது வீடு திறக்கப்படாமல் பூட்டியே கிடந்துள்ளது. இதனால் தோட்ட வேலைக்கு வந்தவர்கள் சந்தேகமடைந்து கதவைத் திறந்து உள்ளே பார்த்துள்ளனர். அப்போது கணவன்-மனைவி 2 பேரும் வி‌ஷம் குடித்து இறந்து கிடந்தனர்.

  இது குறித்து வேடசந்தூர் போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து அவர்களது உடல்களை மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள்களுக்காக வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
  Next Story
  ×