என் மலர்

    நீங்கள் தேடியது "Dindigul suicide"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நிலக்கோட்டையில் நோய் கொடுமையால் பிளேடால் உடலை அறுத்து முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டார்.
    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஆச்சிநகரைச் சேர்ந்தவர் ஜெயபாலன் (வயது 74). இவர் ராணுவத்தில் பணியாற்றி கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். கடந்த சில நாட்களாக இவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு உடல்நிலை மோசமானது.

    இதனையடுத்து வத்தலக்குண்டுவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் வீடு திரும்பிய ஜெயபாலன் தனது உடல்நிலை குறித்து புலம்பியவாறு இருந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிளேடால் கழுத்து, கை நரம்பு உள்பட பல்வேறு பகுதிகளில் கீறி ரத்தவெள்ளத்தில் கிடந்தார்.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி சரோஜா (65), மகன் ராஜா ஆகியோர் அவரை நிலக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயபாலன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மயில்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×