என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

X
தக்காளி
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் தக்காளி விலை மீண்டும் ரூ.100-ஐ தாண்டியது
By
மாலை மலர்4 Dec 2021 5:04 AM GMT (Updated: 4 Dec 2021 5:04 AM GMT)

வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் தக்காளி வரத்து குறைந்ததாலும், மழை நேரங்களில் தக்காளியில் அதிகமாக அழுகல் ஏற்பட்டதாலும் சமீபத்தில் தமிழகத்தில் தக்காளி விலை ரூ.150 வரை உயர்ந்தது.
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களிலும் தக்காளி விலை 1 கிலோ ரூ.140 வரை அதிகரித்து காணப்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு வடமாநிலங்களில் இருந்து தக்காளியை கூடுதலாக கொள்முதல் செய்யவும், பசுமை காய்கறி கடை உள்பட பல்வேறு அரசு துறை அங்காடிகளிலும் தக்காளி விற்பனை செய்ய உத்தரவிட்டது. இதனால் தக்காளி விலை கிலோ ரூ.60 வரை குறைந்தது.
இந்த நிலையில் இன்று மீண்டும் நெல்லையில் தக்காளி விலை அதிகரித்தது. நெல்லை உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க் கும், ஒரு கிலோ வெள்ளை கத்தரிக்காய் ரூ.120-க்கும், கொத்தவரைக்காய் ரூ.65-க்கும் விற்பனையானது. முருங்கைக்காய் ரூ.110-க்கு விற்பனையானது.
பாளை மார்க்கெட்டிலும் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டது. குடியிருப்பு பகுதிகளில் உள்ள சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது.
சில இடங்களில் பழைய தக்காளி பழம் இருந்தால் அதை ரூ.80 வரை குறைத்து விற்பனை செய்தார்கள். நயினார்குளம் மொத்த மார்க்கெட்டில் தக்காளி விலை இன்று ஒரு கிலோ ரூ.95 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளை கத்தரிக்காய் விலை ஒரு கிலோ ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் மொத்த மார்க்கெட்டில் இன்று தக்காளி விலை ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது. வெள்ளை கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.85 முதல் 120 வரை விற்பனை செய்யப்பட்டது.
மிகவும் விலை குறைவாக விற்கப்படும் சீனி அவரைக்காய் விலை அதிகரித்து இன்று ஒரு கிலோ ரூ.62-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெண்டைக்காய் விலையும் கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆலங்குளம் மார்க்கெட்டில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டங்களில் உள்ள மற்ற நகர் பகுதிகளில் தக்காளி விலை ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. வெள்ளை கத்தரிக்காய் விலை ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று தக்காளி விலை மீண்டும் உயர்ந்தது. உழவர் சந்தைகளில் ரூ.100-க்கும், வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.130-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அம்மா பசுமை கடையில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.
குடியிருப்பு பகுதியில் உள்ள சில்லறை கடைகளில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. வெள்ளை கத்தரிக்காய் விலை ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டது.

Next Story
×