search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மஞ்சூர்-ஊட்டி சாலையில் குந்தா பாலம் அருகே மண்சரிவு ஏற்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    மஞ்சூர்-ஊட்டி சாலையில் குந்தா பாலம் அருகே மண்சரிவு ஏற்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    கோவை, நீலகிரியில் கனமழை: 13 இடங்களில் மண்சரிவு- வீடுகள் இடிந்தன

    கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக 3 வீடுகளில் சுவர் இடிந்து விழுந்தது. வீட்டிற்குள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் மழை பெய்தது.

    விடிய, விடிய கொட்டி தீர்த்த மழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இந்த மழைக்கு சேரனுர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரது வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன.

    மஞ்சூர்- ஊட்டி சாலையில் குந்தா பாலம் அருகே 3 இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டது. இதேபோல் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குடியிருப்புகளுக்கருகே மண்சரிவுகள் ஏற்பட்டது. இதனால் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஊட்டி- கோத்தகிரி சாலை மேல்கோடப்பமந்து பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள வீடுகள் அந்தரத்தில் தொங்குவதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

    கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக 3 வீடுகளில் சுவர் இடிந்து விழுந்தது. வீட்டிற்குள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெய்த மழைக்கு மரப்பேட்டை வீதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் மழைநீருடன் சாக்கடை நீரும் புகுந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதேபோல் வகுப்பறைக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் வெள்ளத்தில் நனைந்தன. இதேபோல் கோவை குறிச்சி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. 

    Next Story
    ×