என் மலர்

  செய்திகள்

  தலைக்கவசம்
  X
  தலைக்கவசம்

  தலைக்கவசம் அணியாமல் ஆட்டோ ஓட்டியதாக ரூ.100 அபராதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக ஆட்டோ பதிவு எண்ணை குறிப்பிட்டு வழக்குப்பதிவு செய்து அபராதம் கட்ட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
  மானாமதுரை:

  மானாமதுரை ஜீவா நகரை சேர்ந்தவர் முருகன். இவர் மானாமதுரை பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகின்றார். கடந்த 17-ந் தேதி காலை 11.10 மணிக்கு விருதுநகர் மாவட்டம் வீரசோழன் பகுதிக்கு சவாரிக்கு சென்று உள்ளார். அதன் பின்னர் 2 நாட்கள் கழித்து அவருடைய செல்போனுக்கு இ-சலான் குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதைபார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக ஆட்டோ பதிவு எண்ணை குறிப்பிட்டு வழக்குப்பதிவு செய்து அபராதம் கட்ட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து ஆட்டோ டிரைவர் முருகன் கூறிய தாவது:- சிவகங்கை மாவட்டத்தில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் விசாரிக்காமல், சோதனையிடாமல் அபராதம் விதித்துவருகின்றனர். இதனால் தான் ஆட்டோ டிரைவர்களுக்கு ஆட்டோ ஓட்டும் போது தலைக்கவசம் அணியவில்லை என்று அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×