என் மலர்
செய்திகள்

வீராணம் ஏரி
வீராணம் ஏரியில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
வீராணம் ஏரியில் இருந்து சென்னை மாநகர் குடிநீருக்கு மட்டும் 61 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
காட்டுமன்னார் கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.
இந்த ஏரிக்கு பருவமழை பெய்யும் காலங்களிலும், மேட்டூர் அணை மூலமும் தண்ணீர் வரும். தற்போது மேட்டூர் அணையில் அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதாலும், வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி 45.25 அடி நீர்மட்டம் உள்ளது. நேற்று விடிய விடிய கனமழை நீடித்தது. எனவே வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
சென்னை மாநகர் குடிநீருக்கு மட்டும் 61 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

Next Story