search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை நிலவரம்

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து, ஒரு சவரன் ரூ.34,952-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.352 குறைந்தது. இதனால் பவுன் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. நேற்று பவுன் ரூ.34 ஆயிரத்து 968 ஆகவும், ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 369 ஆகவும் இருந்தது.

    இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்தது. சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.16 குறைந்து ரூ.34 ஆயிரத்து 952-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 369 ஆக உள்ளது.

    வெள்ளி விலையில் கடும் சரிவு ஏற்பட்டது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1,700 குறைந்து ரூ.64 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.20-க்கு விற்கிறது. கடந்த இரண்டு நாட்களில் வெள்ளி கிலோவுக்கு ரூ.2,800 குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×