என் மலர்
செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம் வழங்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணம்... மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்
மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்படுவோருக்கு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள் உதவி செய்கின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் சாா்பாக அதன் மாநிலத் தலைவர் ரெ.தங்கம் ஏற்பாட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது.

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணத் தொகுப்பு பையை வழங்கி, துவக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், சென்னை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் க.சுப்பிரமணி, சைதைப் பகுதி அதிமுக செயலாளர்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி, இரா.துரைராஜ், சங்க பொதுச்செயலாளர் எஸ்.சரவணகுமாா், பொருளாளர் எஸ்.பூபதி, துணைப்பொதுச்செயலாளர்கள் பா.வெங்கடேசன், கே.இளங்கோவன், சங்க பிஆர்ஒ. தி.நகர் பா.சக்திவேல், இரா.கோவிந்தராஜ், துணைப் பொதுச் செயலாளர் பா.பிரசாத், துணைச்செயலாளர் சாயி ஆகாஷ் மற்றும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Next Story






