என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடம்.
    X
    ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடம்.

    நீலகிரியில் தட்டுப்பாடு- கொரோனா தடுப்பூசிக்கு டோக்கன் வினியோகம்

    நீலகிரியில் கொரோனா தடுப்பூசி அரசு ஆஸ்பத்திரி ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட 36 இடங்களில் செலுத்தப்பட்டு வருகிறது.

    ஊட்டி:

    சுற்றுலா மாவட்டமான நீலகிரியில் கடந்த ஆண்டு மார்ச் 25-ந்தேதி முதல் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது.

    சில தளர்வுக்கு பின்னர் சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முயன்றபோது கொரோனா 2-வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. நீலகிரியில் நேற்று ஒரே நாளில் 48 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 51 பேர் பலியாகி உள்ளனர். மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 9 ஆயிரத்து 113-ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா தடுப்பூகள் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் முதலில் தயக்கம் காட்டினர். விழிப்புணர்வு மற்றும் காட்டு தீ போல் பரவும் கொரோனா அச்சம் உள்ளிட்ட காரணங்களால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிகமானோர் முன்வந்துள்ளனர்.

    நீலகிரியில் கொரோனா தடுப்பூசி அரசு ஆஸ்பத்திரி ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட 36 இடங்களில் செலுத்தப்பட்டு வருகிறது. இது தவிர 10 தனியார் ஆஸ்பத்திரிகளிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

    நேற்று காலை மக்கள் தடுப்பூசி செலுத்த சென்ற போது தட்டுப்பாடு என கூறினர். இதனால் ஊசிபோட வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஏமாற்றத்தை தடுத்து நம்பிக்கை ஏற்படுத்தும்விதமாக தனியார் ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு டோக்கன்’ வழங்கினர்.

    இது குறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறும்போது, நேற்று காலை சிறிது நேரம் தட்டுப்பாடு இருந்தது. பின்னர் 5 ஆயிரம் தடுப்பூசிகள் கொண்டுவந்து அனைத்து இடங்களுக்கும் வழங்கப்பட்டது. 45 வயதுக்கு மேற்பட்ட 67 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஊசி செலுத்தாத இடங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார். தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    Next Story
    ×