search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உண்டியல் பணம் எண்ணும் பணிநடந்தபோது எடுத்த படம்.
    X
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உண்டியல் பணம் எண்ணும் பணிநடந்தபோது எடுத்த படம்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1.34 கோடி உண்டியல் காணிக்கை

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள 38 உண்டியல்கள் கோவில் இணை ஆணையர் மேற்பார்வையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் அலங்கார மண்டபத்தில் தைமாத பவுர்ணமி முடிவடைந்ததை முன்னிட்டு நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் எண்ணப்பட்டது.

    இதில் 200-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டு உண்டியல் வசூல் பணத்தை தனித்தனியாக பிரித்து எண்ணி கணக்கிட்டனர்.

    அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள 38 உண்டியல்கள் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மேற்பார்வையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

    இதில் மொத்தம் ரூ.1 கோடியே 34 லட்சத்து 27ஆயிரத்து 677 ரொக்கம், 317 கிராம் தங்கம், 560 கிராம் வெள்ளி ஆகியவை இருப்பது தெரியவந்தது.

    முன்னதாக உண்டியல் பணம் எண்ணும் பணியில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் உதவி ஆணையர் ராமு மற்றும் அருணாசலேஸ்வரர் கோவில் மணியம் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×