என் மலர்

  செய்திகள்

  கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)
  X
  கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)

  அங்கன்வாடி பணியாளர்களுக்கு கட்டாய கொரோனா தடுப்பூசி- அதிகாரிகள் மீது புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கரூர் தான்தோன்றிமலை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளது.
  கரூர்:

  இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மருத்துவப்பணியாளர்களை தொடர்ந்து முன்கள பணியாளர்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதில் விருப்பம் உள்ளவர்கள் போட்டுக் கொள்ளலாம். யாரையும் கட்டாயப்படுத்த கூடாது என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

  இந்தநிலையில் கரூர் தான்தோன்றிமலை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளது.

  தடுப்பூசியை போட்டுக்கொள்ள அதிகாரிகள் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சம்மன் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

  இருப்பினும் தொடர்ச்சியாக பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டினர். இந்த பிரச்சனை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் நள்ளிரவு எழுந்தது. இதில் அலுவலர்களுக்கும், சமையலர்களுக்கும் இடையே தகராறு மூண்டது. இதையடுத்து அங்கன்வாடி பணியாளர்கள் கட்டாயத்தின் பேரில் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தெரிகிறது.

  இதுபற்றி அங்கன்வாடி பணியாளர்கள் கூறும்போது, தடுப்பூசி போட்டுக்கொள்வது சுய விருப்பம் சார்ந்தது. ஆனால் நாங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள இங்கு அச்சுறுத்தப்படுகிறோம். முதலில் உலகில் உள்ள அத்தனை அரசியல் கட்சி தலைவர்கள், வி.ஐ.பி.க்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளட்டும் என ஆவேசமாக கூறினர்.

  இதுபற்றி கரூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி கூறும்போது, தடுப்பூசி போட்டுக்கொள்ள நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்கப்படுத்தினோம். அவர்கள் குழந்தைகளுடன் இருப்பதால் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை எடுத்து சொல்கிறோம். மேலும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரும் வழங்குகிறார்கள்.

  தடுப்பூசி போட்டுக்கொள்ள அச்சப்பட தேவையில்லை. கரூர் கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி, உயர் போலீஸ் அதிகாரிகள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். முன்களப் பணியாளர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பம் தெரிவித்து வருகிறார்கள் என்றார்.
  Next Story
  ×