என் மலர்
செய்திகள்

சசிகலாவை வரவேற்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.
கூடலூரில் சசிகலாவை வரவேற்று பரபரப்பு போஸ்டர்கள்
கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது நீலகிரி மாவட்ட அ.தி.மு.கவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊட்டி:
சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவை வரவேற்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.கவினர் பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள அ.தி.மு.க நீலகிரி மாவட்ட எம்.ஜி.ஆர் அணி துணைச் செயலாளர் தம்பிராமசாமி என்பவர் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஓட்டியுள்ளார். அதில் சோதனைகளை வென்று சாதனை படைக்க தமிழகம் வரும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்களை வருக வருக என வரவேற்கிறோம் என எழுதப்பட்டிருந்தது.
இந்த போஸ்டர்கள் கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இது நீலகிரி மாவட்ட அ.தி.மு.கவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story