search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை அரசு பஸ்கள்
    X
    புதுவை அரசு பஸ்கள்

    புதுவையில் 2-வது நாளாக அரசு பஸ்கள் ஓடவில்லை

    புதுவையில் போக்குவரத்து ஊழியர்களின் 2-வது நாள் போராட்டத்தால் நகர பகுதியில் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கிராமப்புற பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
    புதுச்சேரி:

    புதுவை அரசு போக்குவரத்துக்கழக (பி.ஆர்.டி.சி.) ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    நேற்று அதிகாலை புதிய பஸ்நிலையம் பின்புறம் உள்ள பணிமனை முன்பு திரண்ட ஊழியர்கள் பஸ்களை எடுக்கவிடாமல் வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    இதனால் புதுவையில் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இன்று 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. காரைக்காலில் பணிமனை முன்பு பேராட்டம் நடத்த வந்த ஊழியர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

    ஆனால், புதுவையில் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கவில்லை. இதனால் புதுவையில் ஊழியர்கள் பணிமனை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடு பட்டனர்.

    நிரந்தர ஊழியர்கள் பஸ்களை இயக்க தயாராக இருந்தும் பஸ்களை வெளியே கொண்டுவர முடியவில்லை. நேற்று பெங்களூரு, குமுளி, நாகர்கோவில் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல முன்பதிவு செய்திருந்த பயணிகளின் கட்டணம் திருப்பி வழங்கப்பட்டது.

    2-வது நாள் போராட்டத்தால் நகர பகுதியில் புதுவை அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கிராமப்புற பயணிகள் அவதிக்குள்ளாகினர். தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    Next Story
    ×