என் மலர்
செய்திகள்

பனை ஓலையில் வேளாங்கண்ணி தேவாலயம்
பனை ஓலையில் வேளாங்கண்ணி தேவாலயம்- தூத்துக்குடி தொழிலாளி அசத்தல்
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வேளாங்கண்ணி தேவாலயத்தை பனை ஓலையில் தூத்துக்குடியை சேர்ந்த பனை தொழிலாளி தத்ருபமாக உருவாக்கி உள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 60). பனை தொழிலாளி. இவர் பனை ஓலையில் 7 அடிய உயர காமராஜர் சிலை, அப்துல் கலாம் சிலை, உழவன் சிலை, பள்ளி செல்லும் குழந்தைகள் சிலை என பல்வேறு சிலைகளை தத்ருபமாக உருவாக்கி உள்ளார்.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வேளாங்கண்ணி தேவாலயத்தை பனை ஓலையில் செய்து தத்ருபமாக வைத்துள்ளார். இதை ஏராளமானோர்கள் பார்த்து ரசித்து செல்கிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 60). பனை தொழிலாளி. இவர் பனை ஓலையில் 7 அடிய உயர காமராஜர் சிலை, அப்துல் கலாம் சிலை, உழவன் சிலை, பள்ளி செல்லும் குழந்தைகள் சிலை என பல்வேறு சிலைகளை தத்ருபமாக உருவாக்கி உள்ளார்.
ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த 5-ந்தேதி அவரது 7 அடி உயர சிலையை பனை ஓலையில் செய்து இருந்தார்.
Next Story