என் மலர்
செய்திகள்

மழை
கோபிசெட்டிபாளையம் பகுதியில் 9 செ.மீ.மழை கொட்டி தீர்த்தது
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் மட்டும் அதிகபட்சமாக நேற்று இரவு 9 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி, டி.என். பாளையம், புஞ்சை புளியம்பட்டி, சத்தியமங்கலம், பவானி சாகர் ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. வனப்பகுதிகளில் அதிகளவில் மழை பெய்ததால் பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கரட்டுர், நல்லகவுண்டம்பாளையம், கரட்டடிபாளையம், நஞ்சகவுண்டன் பாளையம், பாரியூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை கொட்டியது. விடிய, விடிய பெய்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
இடைவிடாமல் இன்று காலை 6 மணி வரை மழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் விவசாய வயல்களில் தண்ணீர் தேங்கியது. மேலும் பாரியூர் பகுதியில் பெய்த மழையின் காரணமாக வெள்ளம் நெற்பயிர் வயலில் தேங்கி நிற்கிறது.
இதே போல் தொடர் மழை காரணமாக கோபி அருகே உள்ள கீரிபள்ளம் ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஓடையில் வரும் மழைவெள்ளத்தை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்க்க திரண்டனர். கோபி பகுதியில் மட்டும் அதிகபட்சமாக நேற்று இரவு 9 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.
இதே போல் எலந்தகுட்டை மேடு, கொடிவேரி, கவுந்தப்பாடி உள்ளிட்ட இடங்களிலும் விடிய, விடிய பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சத்தியமங்கலம், பவானிசாகர், தொட்டம் பாளையம், வடவள்ளி, பண்ணாரி, சிக்கரசம் பாளையம், ஓட்ட குட்டை, அரியப்பம் பாளையம், திம்பம் மலைப்பகுதி உள்ளிட்ட இடங்களிலும் விடிய, விடிய மழை பெய்தது.
மழை காரணமாக திம்பம் மலைப்பாதையில் அனைத்து வாகனங்களும் ஊர்ந்து சென்றது. மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் வனப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது.
அணைகள், ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் விவசாய கிணறுகளின் நீர்மட்டமும் உயர்ந்து உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு- கோபி-90.2, எலந்தக்குட்டை-85.4, கொடிவேரி-19, கவுந்தப்பாடி-40, சத்தியமங்கலம்-19, பவானி சாகர்-10.6, குண்டேரிப்பள்ளம்-16.2, பெரும்பள்ளம்-5.
பவானி சாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 96.22 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 271 கனஅடி வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் 35.65 அடியாக இருக்கிறது. அணைக்கு வினாடிக்கு 6 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.
பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 16.75 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 33 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.36 கனஅடியாக இருந்தது.
கோபி மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story