என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
புதுச்சேரியில் இன்று மேலும் 380 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் இன்று மேலும் 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,601 ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரி:
கொரோனா வைரஸ் இந்தியாவையும் நிலைகுலையச் செய்து வருகிறது. இங்கு தினசரி தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 83 ஆயிரத்து 809 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரே நாளில் இவ்வளவு அதிகம் பேர் தொற்றுக்கு ஆளாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதனால் நாடு முழுவதும் கொரோனாவிடம் சிக்கியவர்களின் எண்ணிக்கை 43 லட்சத்து 30 ஆயிரத்து 237 ஆக உயர்ந்தது. இது மத்திய, மாநில அரசுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பதுடன், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தி இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் நிகழ்ந்த கொரோனா பலி எண்ணிக்கை 1,054 ஆகும். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கையும் 80,776 ஆக அதிகரித்து இருக்கிறது.
தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 90 ஆயிரத்து 061 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 38 லட்சத்து 59 ஆயிரத்து 400 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் 380 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,601 ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி இதுவரை 405 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Next Story