என் மலர்

  செய்திகள்

  மேட்டூர் அணை
  X
  மேட்டூர் அணை

  மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரைவிட அணையில் இருந்து குறைந்த அளவே நீர் திறந்துவிடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
  மேட்டூர்:

  காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

  நேற்று 8 ஆயிரத்து 575 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 8 ஆயிரத்து 608 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

  அணையில் இருந்து காவிரியில் 6 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 700 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டு வந்தது. இன்று காலை முதல் கால்வாயில் தண்ணீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

  அணைக்கு வரும் தண்ணீரைவிட அணையில் இருந்து குறைந்த அளவே நீர் திறந்துவிடப்படுவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

  நேற்று 92.24 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 92.37 அடியானது.

  Next Story
  ×