என் மலர்

  செய்திகள்

  அமைச்சர் செங்கோட்டையன்
  X
  அமைச்சர் செங்கோட்டையன்

  ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் புத்தாக்க பயிற்சி- அமைச்சர் செங்கோட்டையன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முதல்-அமைச்சரிடம் ஒப்புதல் பெற்று ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் புத்தாக்க பயிற்சி நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
  ஆப்பக்கூடல்:

  ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் நடத்தப்படும் புத்தாக்க பயிற்சியை ஆன்லைன் மூலம் நடத்த முதல்-அமைச்சரிடம் ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்தப்படும். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பிறகு விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

  மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ரூ. 1 கோடியே 14 லட்சத்தில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. கோபி அருகே உள்ள விளாங்கோம்பை மலைவாழ் மக்களுக்கு தலா ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் பசுமை வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.

  விளாங்கோம்மையில் வனத்துறை மூலமாக புதிய பள்ளிக்கூடம் விரைவில் திறக்கப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×