search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எட்ரப்பள்ளி கிராமத்தில் கலெக்டர் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.
    X
    எட்ரப்பள்ளி கிராமத்தில் கலெக்டர் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

    கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்- கலெக்டர் ஆய்வு

    வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    வேப்பனப்பள்ளி:

    வேப்பனப்பள்ளி ஒன்றியம் சித்தகும்மணப்பள்ளி ஊராட்சி எட்ரப்பள்ளி கிராமத்தில் முருகன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வெளியூர்களில் இருந்து வந்த நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பாக கிருமிநாசினி தெளிக்கும் பணிகள், பிளிச்சிங் பவுடர் தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    தொடர்ந்து நேரலகிரி ஊராட்சி மேட்டுப்பாளையம் கிராமத்தில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மருத்துவக்குழுவினர் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி பரிசோதனை மேற்கொண்டனர். இந்த பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், அன்சர், ஊராட்சி செயலர் முகிலன், சுகாதார ஆய்வாளர் ஜெயசீலன், மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    இந்த ஆய்வின் போது கலெக்டர் கூறுகையில், எட்ரப்பள்ளி முருகன் கோவில் பகுதியில் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். சுகாதார துறையினர் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் கண்டறியும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். வெளியூர்களில் இருந்து வரும் நபர்கள் குறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

    தொடர்ந்து அந்த பகுதி பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார்.
    Next Story
    ×