என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை சீரமைப்பு பணியை சாந்திராமு எம்எல்ஏ தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
    X
    சாலை சீரமைப்பு பணியை சாந்திராமு எம்எல்ஏ தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    ரூ.47 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி- சாந்திராமு எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

    குன்னூர் அருகே ரூ.47 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணிகளை சாந்திராமு எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
    குன்னூர்:

    குன்னூர் அருகே சானிடோரியம், கம்பி சோலை, போன்ற குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்தகுடியிருப்பு பகுதிகள் பேரட்டி ஊராட்சிக்குட்பட்டதாகும். இந்த பகுதிகளில் இருந்து தங்கள் அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் பேரட்டி, சின்ன வண்டி சோலை ஆகிய கிராமங்களின் வழியாக செல்லும் சாலையை பயன்படுத்தி எம்.ஆர்.சி. ராணுவ முகாம் வழியாக குன்னூர் மற்றும் ஊட்டிக்கு வாகனங்கள் மூலம் சென்று வந்தனர்.

    இந்த நிலையில் சானிடோரியத்தில் இருந்து சின்ன வண்டி சோலைவரை சாலை நீண்டகாலமாக குண்டும், குழியுமாக இருந்தது. வாகனங்கள் செல்லவோ, பொதுமக்கள் நடந்து செல்லவோ முடியாத சாலையாக இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் வாகனங்களில் சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனை தொடர்ந்து பொது மக்களின் நலன் கருதி சானிடோரியம் முதல் சின்னவண்டி சோலை வரை உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. இந்த நிலையில் சாலையை சீரமைக்க ரூ.47 லட்சம், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ஒதுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சாலை சீரமைப்பு பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

    குன்னூர் சாந்திராமு எம்.எல்.ஏ, பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் குன்னூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பேரட்டி ராஜூ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×