என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 388 பேருக்கு கொரோனா

    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 388 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விருதுநகர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 388 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,055 ஆக உயர்ந்துள்ளது.

    செங்கல்பட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 9,180 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் 3,304 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி 223 பேர் உயிரிழந்துள்ளனர்.


    Next Story
    ×