என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
    X
    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

    புதுச்சேரியில் இன்று 86 பேருக்கு கொரோனா பாதிப்பு

    புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,872 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14 லட்சத்தை கடந்துள்ளது. மொத்தம் 14,35,453 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 49,931 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 708 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,771 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 9,17,568 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,85,114 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 3.75 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை 375799 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 213238 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 13656 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில்  213723 பேருக்கும், டெல்லியில் 130606 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,872ஆக உயர்ந்துள்ளது. 
    Next Story
    ×