என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ் பரிசோதனை
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 131 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 131 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 13,85,522 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 48,661 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 705 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,063 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 8,85,577 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,67,882 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 366368 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 207194 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 13389 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 206737 பேருக்கும், டெல்லியில் 129531 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 131 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,787 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 1,645 பேர் குணமடைந்துள்ளனர். 1,102 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 40 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story